பீகாரில் நிதிஷ்குமாருடன் கூட்டணி தொடரும்….அமித்ஷா

பாட்னா:

பீகாரில் நிதிஷ் குமாருடன் எவ்வித பிரச்னையும் இல்லை. கூட்டணி தொடரும் என பா.ஜ.க தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதனால் பா.ஜ.க தலைவர் அமித்ஷா மாநிலங்களுக்கு சென்று கட்சியை பலப்படுத்தும் பணி, கூட்டணி குறித்தும் ஆலோசித்து வருகிறார்.
இந்த வகையில் பீகார் சென்ற அவர் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார்.

இரு கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படடு வந்தது. இந்நிலையில் இன்று காலை இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் கலந்துகொண்ட அமித்ஷா கூறுகையில், ‘‘பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி தொடரும். நிதிஷ்குமார் உறவில் பிரச்னை இல்லை. எங்களது கூட்ணணி பீகாரில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’’ என்றார்.