பெங்களூரு: கர்நாடகா ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா தொற்றுக்கு பலியானார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்பு ஏற்பட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து செப்டம்பர் 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அசோக் காஸ்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவர் ஜூலை 22ம் தேதி பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்று இருந்தார். உயிரிழந்த அசோக் காஸ்தி எம்.பி.க்கு சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel