அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்….பொன் ராதாகிருஷ்ணன்

சென்னை:

சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள். நான் அவர்களை தீவிரவாதிகள் என்று அழைக்கும் போது, அவர்களை நீங்கள் எப்படி சமூக விரோதிகள் என்று அழைக்கலாம். அதனால் தான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் சமூக விரோதிகளை விட மோசமானவர்கள். அவர்கள் மக்களுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானவர்கள். அவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டனர். அது மகிழ்ச்சி அளிக்கிறது. நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்கினால் மத்திய அரசு தலையிடும். மேற்கு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு எதிரானவர்கள் தான் சேலம்&சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த திட்டத்தை வேண்டாம் என்று கூறுபவர்கள் மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சியை விரும்பாதவர்கள். தமிழகத்தில் தொழில் மயமாக்கல் என்று பார்த்தால் 60 சதவீத தொழிற்சாலைகள் மேற்கு மாவட்டங்களில் தான் உள்ளன’’என்றார்.