கொல்கத்தா:

குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சியின்  துணைத்தலைவரும்,  சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் எழுந்துள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம் உள்பட பல மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்க்காதது ஏன்? என மேற்குவங்க பாஜக துணை தலைவரும், சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், குடியுரிமை சட்டம் மதத்தின் அடிப்படையில் திருத்தப்பட்டதல்ல என்றால் அதில் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், கிறிதுவர்கள், பார்சிகள், ஜெயின்கள் உள்ளடக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மட்டும் விடப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக துணைத்தலைவரின் இந்த கேள்வி, பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.