4 வருடங்களாக ஒரு சிறுமியை பலாத்காரம் செய்த பாஜக தலைவர் கைது

மும்பை

ற்போது 17 வயதாகும் ஒரு சிறுமியை 4 வருடங்களாகப் பலாத்காரம் செய்ததாக ஒரு பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை நகரில் உள்ள பாஜக பொறுப்பாளர் ஒருவர் திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.    சுமார் 41 வயதாகும் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு சிறுமியைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.  மேலும் இதை வெளியில் சொன்னால் அந்தப் பெண்ணை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.

அதன் பிறகு அந்த பாஜக தலைவர் கடந்த 4 வருடங்களாக அந்தப் பெண்ணை மிரட்டி அவருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார்.    கடந்த வாரம் தற்போது 17 வயதாகும் அந்தச் சிறுமி  காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.   அதை ஒட்டி பாஜக தலைவர் மீது வழக்கு  பதியப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த பாஜக தலைவரை நேற்று நீதிபதி முன் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை காவல்துறையினர் காவலில் விசாரணை செய்ய அனுமதி கோரினர்.  நீதிபதி இந்த மாதம் 27 வரை அதற்கு அனுமதி வழங்கி உள்ளார்.