சென்னை

திமுக அமைச்சர்கள் சமமான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என பாஜக தமிழக துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார்.

தமிழகத்தில் ஆளும் கட்சியான் அதிமுக உடன் பாஜக கூட்டணியில் உள்ளதாகக் கூறப்பட்டாலும் இரு கட்சி தலைவர்களும் தொடர்ந்து விதம் விதமாகக் கருத்துக்களை கூறி வருகின்றனர்.  அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்க பாஜக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று பாஜகவின் தமிழக துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கேட்கபட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின் வருமாறு :

“நான் அதிமுக அமைச்சர்களின் பேச்சை தொடரந்து  கவனித்து வருகிறேன்.   அவர்கள் மோடியின் தலைமையிலான தேசிய ஜன்நாயக் கூட்டணியில் சில வாரங்களாகப் பங்கு வகிக்கின்றனர்.  ஆனால் அவர்களின் பேச்சுக்களில் கூறப்படும் கருத்துக்கள் விமர்சனத்தை உண்டாக்குகிறது.  எனவே அதிமுக அமைச்சர்கள் தங்களது சமமான கருத்துக்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால் மோடியின் தலைமையையும் அதிமுகவையும் விமர்சிக்கும் திமுகவுக்கு இது ஊக்கம் அளிக்கும்.  திமுகவின் இந்த வலையில் அதிமுக விழுந்து வடக் கூடாது. தேர்தல் குறித்து எடுக்க வேண்டிய முடிவுகளை எங்கள் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானம் செய்யும்.  முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு அதிமுகவுக்கு உள்ளது. தமிழக மக்களுக்கு நலம் தரும் முடிவை அவர்கள் எடுத்து மாநிலத்தில் உள்ள 12000 சிற்றூருக்கு மத்திய அரசு செய்துள்ள பணிகளையும் அமைச்சர்கள் நினைவு கோர வேண்டும்.

பாஜக வாக்குச் சாவடி மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்துவதில் முனைந்துள்ளது.   நாங்கள் மத்திய அரசின் திட்டங்களான புதிய இந்தியா, சுயசார்பு பாரதம் ஆகியவற்றைக் குறித்துக் கூறி வருகிறோம்.  எனவே தமிழக அரசும் இது குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்கள் எங்கள் கூட்டணியில் உள்ளதால் இந்த கோரிக்கையை எழுப்பி உள்ளோம்.  ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகத்திலும் மோடியின் படத்தை வைக்கச் சொல்லிக் கேட்டுள்ளோம்.

இந்த கூட்டணி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகும் தொடரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.  எனவே கூட்டணியில் எவ்வித அதிருப்தியும் இல்லை.  முதல்வர் வேட்பாளர் குறித்து  பாஜக முடிவு எடுப்பது குறித்து இதுவரை எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை.  தேவைப்படும் போது பேச்சு வார்த்தை நடக்கும். இது குறித்த முடிவை நாடாளுமன்றக் குழு அறிவிக்கும்.

ரஜினிகாந்த்  உடல்நிலை சரியாக இல்லை என்பதால் அவர் நன்கு குணமடைய வேண்டும் என்பதையே நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.   அரசியலில் என்ன நடக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. ரஜினிகாந்த் முடிவு என்ன. அவர் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து எதுவும் தெரியாத நிலையில் அவருடன் கூட்டணி வைப்போமா என்பதை இப்போது சொல்ல முடியாது. ” என சுதாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.