புதுடெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தாக்கி, பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவு, இப்போது சிரிப்பாய் சிரித்துக்கொண்டுள்ளது.

மோடி அரசை, சீனப் பிரச்சினையில் விமர்சித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு புத்திசாலித்தனமாக பதிலளிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டோ என்னவோ, ஜே.பி.நட்டா தெரிவித்துள்ள ஒரு கருத்துதான் தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்டிங்காகி, சிரிப்பாய் சிரித்துக்கொண்டுள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில், இந்தியாவின் 43,000 கிலோ மீட்டர் அளவிலான பரப்பு சீனாவிடம் இழக்கப்பட்டது என்று விமர்சித்துள்ளார் நட்டா. இந்த விவகாரம்தான் அக்கட்சியின் அறிவு லட்சணத்தை மற்றொருமுறை சந்தி சிரிக்க வைத்துள்ளது.

43,000 கிலோ மீட்டர் என்பது பூமியின் மொத்தப் பரப்பளவை விட அதிகம். இந்தியாவின் மொத்தப் பரப்பளவு என்பது வடக்கு தெற்காக 3214 கி.மீ. மற்றும் கிழக்கு மேற்காக 2933 கி.மீ. அவ்வளவே..!

இப்படி இருக்கையில், பாரதீய ஜனதா தேசிய தலைவரின் இந்த அறிவார்ந்த(!) கருத்தைக் கண்ட பலரும் தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கின்றனர். இது ஏதோ இப்போது மட்டுமல்ல, அக்கட்சிக்கு இது வழக்கமான ஒன்றுதான்.

வாயில் வந்ததை அடித்துவிடுவது, அறிவியலுக்கு புறம்பாக பேசுவது, போட்டோஷாப் செய்து ஏமாற்றுவது, வரலாறு என்ற பெயரில் எதையாவது ஜல்லி அடிப்பது என்பன போன்ற விஷயங்களில் கடந்த 6 ஆண்டுகளாக உலக சாதனையே செய்துவருகிறார்கள் பாரதீய ஜனதா & சங்பரிவார் குழுக்கள்! அதுபோன்றதொரு கட்சிக்கு, தான் தேசிய தலைவர் என்ற தனது தகுதியை இப்போது நிரூபித்துள்ளார் ஜே.பி.நட்டா.

அவரின் இந்தக் காமெடிக்கு பதிலளித்துள்ள மன்மோகன்சிங், “பாரதீய ஜனதாவின் தேசிய தலைவராக இருக்கும் அந்த மனிதரின் புவியியல் அறிவு இது. 43000 கி.மீ. என்பது ஏறக்குறைய ஒட்டுமொத்த பூமியின் பரப்பாகும்.

பாரதீய ஜனதாவின் உறுப்பினர்கள், எதற்காக இப்படி படிப்பறிவு இல்லாதவர்களாகவும், போலி செய்திகளைப் பரப்புவோராகவும் உள்ளனர்? என்று மூக்குடைத்துள்ளார்.