காஷ்மீர் பத்திரிகையாளர்களுக்கு பாஜ தலைவர் லால்சிங் பகிரங்க மிரட்டல்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் பத்திரிகையாளர் சுஜாத் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், காஷ்மீர் மாநில பாஜக தலைவர் லால்சிங், காஷ்மீர் பத்திரிகையாளர்களுக்கு, சுஜாத் போல் இல்லாமல் வாழ்வது குறித்து யோசியுங்கள் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி கடந்த 14ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பரபரப்பு அடங்காத நிலையில், காஷ்மீர் பத்திரிகை யாளர்களுக்கு காஷ்மீர் மாநில  பாஜ தலைவர் லால் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் மாநில பாஜ தலைவர் லால்சிங்

கத்துவா வழக்கில் பத்திரிகையாளர்கள் தவறான தகவல்களை வெளியிட்டு முழு வழக்கையும் மாற்றும்  சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் எல்லையை மீறி வருகிறார்கள். நிலைமை மோசமாவதற்கு முன்பே  கட்டுப்படுத்துவது சிறந்தது,  நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை  பற்றி யோசிங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிகையாளர்கள்  தங்களுக்குள் ஒரு கோட்டை வரைந்து செயல்பட வேண்டும் என்றும், . மாநிலத்தில் சகோதரத்து வம் அப்படியே உள்ளது, மேலும் நாங்களும் உங்களுடன் வளர்ச்சியின் பயணத்திலும் இணைந்து கொள்கிறோம் என்றும் கூறி உள்ளார்.

காஷ்மீர் பத்திரிகையாளர்கள் கத்துவா சம்பவத்தின்  வழக்கு  பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு சூழ்நிலையை  மாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் எல்லைக்கோட்டை  மீறி வருகின்றனர் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லால்சிங்கின் பகிரங்க மிரட்டல் பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே லால்சிங்கின் சகோதரர் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா மீது ஹிரா நகரில் நடைபெற்ற பேரணியின்போது குற்றச்சாட்டு கூறி பின்னர் கத்துவா போலீசாரால் ராஜஸ்தானில்  கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 14ந்தேதி  ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்துகொண்டு `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி, காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது,  அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  சுஜாத்  புஹாரி  சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஜம்மு- காஷ்மீர் அப்போதைய முதல்வர்  மெகபூபா முப்தி , மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  போன்ற தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.