போபால்

த்திய பிரதேச பாஜக தலைவர் விவசாயிகள் அனுமன் தோத்திரமான அனுமன் சலிஸாவை ஜெபித்தால் பயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

அனுமன் சலிஸா என்பது ஆஞ்சநேயரைப் பற்றிய 40 சுலோகங்கள் கொண்ட தோத்திரம் ஆகும்.   இதை பொதுவாக பலரும் நினைத்த காரியம் நிறைவேற தொடர்ந்து ஜெபிப்பது வழக்கம்.    இது குறித்து மத்திய பிரதேச தலைவர்களில் ஒருவரும்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ் சக்சேனா ஒரு புதிய தகவல் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பெருமழையுடன் கூடிய சூறாவளிக் காற்று அடுத்த 24 மணி நேரங்களில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   இதற்காக  ம. பி.  விவசாயத்துறை அமைச்சர் பால்கிருஷ்ணா படிதாருக்கு ரமேஷ் சக்சேனா ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

ரமேஷ் சக்சேனா, “வானிலை மையம் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு கடும் இயற்கை சீற்றம் ஏற்படும் என கூறி உள்ளது.   கடும் சூறாவளியும் மழையும் வரும் என தெரிய வந்துள்ளது.   இதற்கு ஒரு நல்ல யோசனை உள்ளது.   விவசாயிகள் தங்கள் கிராமங்களில் ஒன்று கூடி தொடர்ந்து அனுமன் சலிஸாவை ஜெபித்து வர வேண்டும்.   அதன் மூலம் அவர்கள் பயிர்கள் இயற்கை சீற்றத்தில் இருந்து காக்கப்படும்”  என தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவசாய அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது.  “ரமேஷ் சக்சேனா சொல்லியதில் தவறு ஏதும் இல்லை.   அனுமன் சலிஸாவை ஜெபிப்பது மூலம் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும்.   மேலும் அவர்களுடைய தன்னம்பிக்கை பலப்படும்”  எனக் கூறி உள்ளார்.