உ.பி.யில் பரபரப்பு: அகிலேசை ஆதரித்து கோஷமிட்ட சமாஜ்வாதி மாற்றுதிறனாளியின் வாயில் கம்பால் அடித்த பாஜக நிர்வாகி

லக்னோ:

த்தரபிரதேச மாநிலத்தில், முன்னாள் முதல்வர்  அகிலேஷ் யாதவை  ஆதரித்து கோஷமிட்ட சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த  மாற்றுதிறனாளி தொண்டர் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர்,  கம்பால் அவரது வாயினுள் விட்டு, வாயை மூடு என்று அதட்டியும், அவரை  கம்பால்  அடித்தும் துன்புறுத்தி விரட்டும்  காட்சிகள் வைரலாகி வருகிறது.

உ.பி. மாநிலத்தில் சம்பல் பகுதியில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர், தனது கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவை வாழ்த்தி, அகிலேஷ் யாதவ் ஜித்தாபாத் என்று கோஷமிட்டப்படி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த அம்ரோகா பகுதி பாஜக நிர்வாகி, முகமது  மியான் என்பவர், ஒரு கம்பை எடுத்து, அதை அகிலேஷ் யாதவை  வாழ்த்தி,   கோஷமிட்ட மாற்றுத்திறனாளியின் வாயினுள் செலுத்தியும், வாயில் அடித்தும், வாயை மூடு என்று அதட்டி அடித்து விரட்டினார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் சம்பல் பகுதியில் உள்ள எஸ்டிஎம் அலுவலகத்திற்கு வெளியே நடை பற்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மாற்றுத்திறனாளி வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், மாற்றுத்திறனாளி வாலிபர் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி குறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.