பாபர் மசூதி இடிப்பு தினத்தை வி.இ.ப. கொண்டாடுவதில் தவறில்லை! : சுப்பிரமணியன் சுவாமி

டில்லி:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை  விசுவ இந்து பரிஷத் கொண்டாடுவதில் தவறில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரணியசாமி கூறி உள்ளார்.

இந்துத்வா கொள்கைகளில் தீவிர பற்றுடையவராக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியசாமி, பாபர் மசூதி இடிப்பு தினத்தை இந்துத்வா அமைப்புகள் கொண்டாடுவதில் தவறு இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

இன்று நாடு முழுவதும் 26வது பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இந்த தினத்தை விசுவ இந்து பரிஷத் கொண்டாடி வருகிறது. மேலும் அங்கு ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி பேரணி நடத்துகிறது.

இதுகுறித்து கூறிய சுப்பிரமணியசாமி,  பாபர் மசூதி இடிப்புக்கு விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி)  இயக்கம் வழிவகுத்தது. இந்த நாளை அவர்கள் கொண்டாட த் உரிமை உண்டு. பாபர் மசூதியை ஒருவரும் பார்க்க சகிக்காமல் இருந்து வந்தது என்றார்.

இது  எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த இடத்தில் ஒரு கோயில் இருந்தது, அது ராம ஜென்ம பூமி ஆகும்.  பாபர் இங்கு வருகிறார், அவருடைய தளபதி ஆலயத்தை உடைத்து அதன் மேல் ஒரு மசூதியை கட்டியுள்ளார். பல மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கான போராட் டத்தின்போது  4000-5000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்.

தற்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதை விஎச்பி அமைப்பு கொண்டாடி வருகிறது. விசுவ இந்து பரிஷத இந்த தினத்தை கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால், இந்த  கொண்டாட்டம்  அமைதியானதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சாமி கூறி உள்ளார்.