முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சந்திப்பு

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை இன்று சந்தித்துப் பேசினார்.

கடந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக தலைவர் தமிழிசை சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை  இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தார்.

கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறியவும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக  தெரிகிறது.