பா.ஜ.க. நடத்தும் மாட்டுகறி விருந்து!

மேகாலயா,

ரேந்திர மோடி அரசின் மூன்று ஆண்டுகளை கொண்டாடும் வகையில் மேகாலயாவில் மாட்டுக்கறி விருந்து நடைபெறும் என்று அம்மாநில பாரதியஜனதா மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார்.

மத்தியஅரசின் மாடுகள் குறித்த புதிய அறிவிப்பானைக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பல மாநிலங்களில் மத்தியஅரசின் உத்தரவை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது மேகாலயாவில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் ஒருவரே, மோடி அரசின் 3 ஆண்டு சாதனையை மாட்டுக்கறி விருந்துட்ன் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார்.

மேகாலாய மாநிலத்தில் உள்ள வடக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் தலைவரான பச்சு சாம்புவோங் மராக் என்பவர்  தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது,

“பி.ஜே.பியின்  மூன்று ஆண்டு மோடி அரசாங்கத்தை கொண்டாடுவதற்காக பாரதியஜனதா கட்சி மாட்டிறைச்சி விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேகாலயாவில், பெரும்பாலான பா.ஜ.க. தலைவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள், மேகால யாவைப் போன்ற ஒரு மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்யப் படவில்லை என்றும்  பாரதீய ஜனதா கட்சி தலைவர் பெர்னார்ட் மராக் கூறியிருந்தார்.

ஏற்கனவே மேகாலயாவில், மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முதல்வர் கருத்து கூறியிருந்தார். நிலையில், தற்போது மாவட்ட தலைவர் மாட்டிறைச்சி விருந்துக்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.