பாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி. நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.

சென்னை:

நாடு முழுவதும் 17வது மக்களவைக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி, பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர்  வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி  தனது வாழ்த்துகளை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதுபோல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில். மனமார்ந்த வாழ்த்துக்கள்; நீங்கள் சாதித்துவிட்டீர்கள் என்று தெரிவித்து உள்ளார்.