புலந்த்ஷர் படுகொலையின் முக்கிய குற்றவாளியை பாராட்டிய பாஜக: உ.பி.யில் எழுந்த சர்ச்சை

லக்னோ: .பியில் பரபரப்பை ஏற்படுத்திய புலந்த்ஷர் படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பாஜக பாராட்டிய புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் புலந்த்ஷர் கிராமத்தில் பசுக் கொலைக்கு எதிராக போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது அப்பகுதி காவல் நிலையம், வாகனங்கள் தீ வைக்கப்பட்டன.

வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற காவல் அதிகாரி ஷுபோத் குமார் சிங் என்பவர் தாக்கப்பட்டார். பின்னர் அவரை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர் ஷிகர் அகர்வால். முக்கிய குற்றவாளியான அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ஜூலை 14 ம் தேதி ஒரு நிகழ்வில் புலந்த்ஷர் பாஜக தலைவர் அனில் சிசோடியாவால் பாராட்டப்பட்டார்.

உ.பி மேற்கு மாவட்டத்தில் பிரதமரின் நலத்திட்டத்தை மேற்பார்வையிடும் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. பிரதமர் நிவாரண நிதி திட்ட நிகழ்வில் அவர் கலந்து கொண்டுள்ளது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் யாரென்று தெரியாது என்றும், கட்சிக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்றும் புலந்த்ஷர் பாஜக தலைவர் அனில் சிசோடியாக விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர், பாஜக இளைஞர் பிரிவு தலைவரை பிரதமர் மாவட்ட பொதுச் செயலாளராக நியமித்ததாக அறிவித்த கடிதம் மற்றும் நிகழ்வின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.