சிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் கிரந்திகாரி மோர்சா கட்சியிடம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.

 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 100 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் பகல் 12.30 நிலவரப்படி,

சிக்கிம் கிரந்திகாரி மோர்சா: 01 தொகுதி

தேசிய ஜனநாயக கூட்டணி: 00 தொகுதி

இவ்வாறு முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

சிக்கிம் மாநிலத்தின் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இக்கட்சி கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.