மத்தியப் பிரதேசம் : 46 வருட தொகுதியை இழந்த பாஜக

விதேஷா, ம. பி.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 46 வருடங்களாக வெற்றி பெற்ற விதேஷா தொகுதியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

 

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பல இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. இதில் முக்கியமாக பாஜக ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது வெலியாகி உள்ள இறுதி முடிவின் படி மொத்தமுள்ள 230 இடங்களில் பாஜக 109 இடங்களை பெற்று பெரும்பான்மையை இழந்துள்ளது.

மத்தியப் பிர்தேச மாநிலத்தில் உள்ள விதேஷா தொகுதி கடந்த 1977 ஆம் வருடத்தில் இருந்தே பாஜகவின் கோட்டை என கருதப்படுகிறது. கடைசியாக 1973 ஆம் வருடம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பிறகு அந்த தொகுதியில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

இந்த விதேஷா தொகுதி பாஜகவை பொறுத்த வரை ஒரு விஐபி தொகுதி எனவும் கூறலாம். கடந்த 2013 ஆம் வருட தேர்தலில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதி உள்ளடங்கிய பாராளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் பிர்தமர் வாஜ்பாய் ஆகிய பல பாஜக பிரமுகர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது வெளியாகி உள்ள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் படி பாஜகவின் வேட்பாளரான முகேஷ் தண்டனை காங்கிரசின் வேட்பாளர் சஷாங்க் ஸ்ரீகிஷன் பார்கவ் சுமார் 15000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்த தேர்தலில் பாஜக வேட்பாளருக்காக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல பாஜக பிரபலங்கள் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

You may have missed