கர்நாடகா தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

 

 

 

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட இருக்கிறது.
கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 12ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. . 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதையொட்டி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இத்தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இந்த நிலையில் இன்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.