சர்ச்சைக்குரிய அம்சங்களைக் கொண்ட பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையில், சட்டப்பிரிவு 370 நீக்கம், நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசுகையில், சமஸ்கிருதத்தை வளர்ப்போம் என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:

* காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவு நீக்கம்.

* ஜம்மு – காஷ்மீர் சட்டசபைக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ நீக்கம்

* குடியுரிமை சட்டம் நிறைவேற்றம்

* நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டுவருதல்

* அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல்

* சபரிமலையின் மாண்பு மற்றும் பாரம்பரியம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிவுறுத்துதல்

* 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு

* 2022ம் ஆண்டிற்குள் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தை இருமடங்கு அதிகரித்தல்

* 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்

* ஊரக வேளாண் துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்தல்

* ராணுவம் மற்றும் காவல் படைகளை நவீனமாக்குதல்

உள்ளிட்ட மொத்தம் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.