கொல்கத்தா

ஸொமடோ நிறுவன ஊழியர்கள் போராட்டத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

                                                         சீருடையில் இல்லாதவர் சஞ்சீவ் சுக்லா

கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு வழங்கும்  நிறுவனமான ஸொமடோ வின் வாடிக்கையாளரான அமித் என்பவர் உணவுக்கு ஆர்டர் அளித்திருந்தார். அந்த உணவு எடுத்து வருபவர் இந்து மதித்தவர் இல்லை என்பதால் அந்த ஆர்டரை ரத்து செய்துள்ளார். மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வைப் பதிந்துள்ளார். இதற்கு ஸொமடோ நிறுவனம் ”உணவுக்கு மதம் கிடையாது. உணவே மதம்” எனப் பதில் அளித்திருந்தது.

தற்போது கொல்கத்தாவில் வடக்கு அவுரா பகுதியைச் சேர்ந்த ஸொமடோ ஊழியர்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களில் இஸ்லாமியர் மற்றும் இந்துக்கள் ஆகிய இரு மதித்தவரும் உள்ளனர். இஸ்லாமிய ஊழியர்கள் பன்றிக் கறி உணவை அளிக்க மறுத்துள்ளனர். இந்து மத ஊழியர்கள் மாட்டுக்கறி உணவை அளிக்க மறுத்துள்ளனர். இது பெரும் போராட்டமாகி உள்ளது. இந்த  போராட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

இது குறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று ஆய்வு செய்ததில் இந்த போராட்ட புகைப்படத்தில் ஸொமடோ ஊழியர் அல்லாத ஒருவர் இருந்துள்ளார். அவர் வடக்கு அவுரா பாஜ்காவை சேர்ந்த சஞ்சீவ் குமார் சுக்லா என்பது தெரிய வந்துள்ளது. இந்த போராட்டம் குறித்து சுக்லா, “இந்த போராட்டம் ஸொமடோ அளித்த உணவுக்கு மதம் இல்லை என்னும் டிவிட்டின் எதிரொலி,” என கூறி உள்ளார்.

இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் பஜ்ரங் நாத் வர்மா என்பவருடன்  இணைந்து சுக்லா செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வர்மா கடந்த 14 மாதங்களாக ஸொமடோ நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். அவரும் பாஜகவில் பல வருடங்களாக உள்ளார். ஆனால் இந்த போராட்டத்தில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை என இருவரும் மறுத்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்களில் ஒரு சிலர் மட்டுமே பாஜகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி உள்ளனர்.

ஆனால் வட இந்திய ஊடகங்கள் இந்த போராட்டம் ஸொமடோவை பழி வாங்க பாஜக எடுத்துள்ள ஆயுதம் எனக் குறிப்பிட்டுள்ளன.