புலம் பெயர் தொழிலாளரை கொள்ளையருடன்  ஒப்பிட்ட பா.ஜ.க. அமைச்சர்..

புலம் பெயர் தொழிலாளரை கொள்ளையருடன்  ஒப்பிட்ட பா.ஜ.க. அமைச்சர்..

ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்து வந்த  தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவர்களின் சொந்த மாநிலமான பீகார் சென்று கொண்டிருந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா என்ற இடத்தில் அந்த லாரி, சாலையோரம் நின்ற மற்றொரு லாரி மீது மோதியது.

இதில், 25 தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர்.

இது குறித்து உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. அமைச்சர் சவுதாரி உதயபான் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. அவர் என்ன சொன்னார்?

‘இந்த விபத்து வருத்தம் அளிக்கிறது. இதற்கு யாரும் பொறுப்பு ஏற்க முடியாது புலம் பெயரும் தொழிலாளர்களுக்குப் பொறுமை இல்லை. அந்த தொழிலாளர்களுக்காகப் பல இடங்களில் உணவு மற்றும் இருப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.அங்கே தங்கி இருக்க அவர்கள் தயாராக இல்லை. திருடர்கள், கொள்ளையர்கள் போல் ஓடுகிறார்கள்’’ என்று திருவாய் மலர்ந்திருந்தார், அந்த பா.ஜ.க. அமைச்சர்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ’சாரி’’ சொல்லி இருக்கிறார், அமைச்சர்.

‘’ஏதோ வேகத்தில் வார்த்தை தவறி விட்டேன்’’ என்று விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் சவுதாரி..

– ஏழுமலை வெங்கடேசன்