டிவிட்டர் : படிக்காமலே பதிவிடும் பாஜக அமைச்சர்கள்

டில்லி

த்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே வந்த ஒரு பதிவை படிக்காமலே மீண்டும் பதிந்தது சர்ச்சைய ஏற்படுத்தி உள்ளது.

பிரபலங்கள் பலரும் டிவிட்டரில் பதிவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் எண்ணங்களையும் அறிவிப்புக்களையும் டிவிட்டர் மூலமே தெரிவிக்கின்றனர். இதற்கென பலருக்கும் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கங்கள் உள்ளன. பல பிரபலங்கள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட பிரதிநிதிகளை நியமித்துள்ளனர்.

பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் மோடி அரசு மத்திய வகுப்பினருக்கு செய்து வரும் நன்மைகள் என்னும் பதிவில் அரசு குறித்து ஒரு சில தவறான விமர்சனங்கள் இடம் பெற்றிருந்தன. ஒரு மத்திய அமைச்சர் மோடி அரசை தவறாக விமர்சிப்பது ஆச்சரியத்தை உண்டாக்கியது.

அவர் அந்த பதிவை உடனடியாக அழித்த போதிலும் அது பலரால் ஸ்கிரின் ஷாட் எடுக்கபட்டு வைரலானது.

இது குறித்து  ஆய்வுச செய்ததில் அந்த பதிவு மற்றொரு பதிவை வெட்டி ஒட்டியது என தெரிய வந்தது

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப குழு கூகுள் டிரைவ் மூலம் ஏற்கனவே டிரண்ட் ஆகி உள்ள பாஜக தொடர்பான டிவிட்டுகளை வெளியிடுகிறது. இதை மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் காப்பி செய்து அதை பதிவாக பதிகின்றனர். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பாஜக பதிவு டிரெண்ட் ஆகும் என அந்த குழு தெரிவிக்கிறது.

இது குறித்து ஆல்ட் நியுஸ் இணை அமைப்பாளர் பிரதிக் சின்ஹா, “கூகுள் டிரைவ் மூலம் பாஜக பகிர்ந்துள்ள ஒரு பதிவை நான் சற்று மாற்றினேன். அதாவது ’பிரதமர் மோடி கீழ்த்தட்டு மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்’ என இருந்ததை நான் ’பிரதமர் மோடி பணக்கார மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்’ என மாற்றினேன். இது போல யார் வேண்டுமானாலும் இதை மாற்ற முடியும்.

யாரேனும் விஷமிகள் நினைத்தால் அவர்களால் பாஜக அமைச்சர்களின் பல டிவிட்டர் பதிவை தவறுதலாக பதிய வைக்க முடியும். காரணம் கூகுள் டிரைவில் பாஜக அளிக்கும் டிரெண்டிங் செய்திகளை யாராலும் மாற்ற முடியும் என்னும் நிலையில் பாதுகாப்பின்றி உள்ளது. தற்போது பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பதிவில் அது அவ்வாறே நடந்துள்ளது.” என தனது வீடியோ பதிவில் கூறி உள்ளார்.

இதைப் போலவே பாஜக அசாம் பிரிவு தனது டிவிட்டரில் ”மோடிஅரசின் கீழ் உள்ள புதிய இந்தியாவில் நேர்மையின்மை மற்றும் வெளிப்படைதன்மையின்மை ஆகியவை நிறைந்துள்ளது. ஜி எஸ் டி அமுலாக்கப்பட்ட 1.5 வருடங்களில் 55 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கபட்டுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெறும் 65 லட்சம் வரி செலுத்துவோர் மட்டுமே உள்ளனர்” என குழுறுபடியுடன் ஒரு பதிவை பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி : THE QUINT