’செல்போனில் சீன செயலிகளை  நீக்கினால் இலவச ‘மாஸ்க்’

லடாக் பிராந்தியத்தில் 20 இந்திய ராணுவ வீர்ர்கள், சீன ராணுவத்தின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர்.
எல்லையில் சீனாவின் அத்துமீறல்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் , சீனாவின் ’டிக்-டாக்’ செயலி உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்,எல்.ஏ. அனுபமா ஜெய்ஸ்வால் என்பவர் , செல்போனில் சீன நாட்டின் செயலிகளை நீக்கும் ஒவ்வொருக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் மகளிர் அணியுடன் இணைந்து இலவச ‘மாஸ்க்; அளிக்கும் திட்டத்தை செயல் படுத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அனுபமா ஜெய்ஸ்வால், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆரம்பக்கல்வி அமைச்சராக இருந்து வந்தார்.
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அனுபமா, கடந்த ஆண்டு மந்திரி பதவியில் இருந்து, முதல்வர் யோகி ஆதித்ய நாத்தால், நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பா.பாரதி.