பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்குக்கு மேலும் 7 நாள் சிபிஐ கஸ்டடி

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்கார வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

                                         பாஜ எம்எல்ஏ செங்கார்

பின்னர் சிபிஐ அவரை 7 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரித்தது. 7 நாட்கள் முடிவடைந்த நிலையில் நிலையில் குல்தீப் சிங் இன்று உன்னாவ் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிபிஐ கேட்டுக் கொண்டதை தொடர்ந்து குல்தீப் சிங் மேலும் 7 நாட்கள் சிபிஐ விசாரணை மேற்கொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார்.