“டெல்லியில் போராடும் விவசாயிகள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்புகிறார்கள்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை…

 

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மதன் திலாவர் என்பவர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குறித்து, பல்வேறு அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

“மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு விவசாயிகள் டெல்லிக்கு ‘பிக்னிக்’ வந்துள்ளனர்” என பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டியுள்ள மதன் “அவர்களில் கொள்ளையர்கள், தீவிரவாதிகள் கூட கலந்திருக்கலாம்” என தெரிவித்தார்.

“டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்பும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர்” என்று விமர்சித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.மதன் “இவர்கள் நாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

“இந்த விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால், நாடு முழுவதும் பறவை காய்ச்சல் பரவும்” என்று மதன் எச்சரித்தார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

– பா. பாரதி