சுரங்க அதிகாரியிடம் ரூ. 25 லட்சம் கேட்டு மிரட்டிய பாஜக எம் எல் ஏ

க்னோ

ணல் எடுக்கும் இடத்தில் வெடிகுண்டு பயன்படுத்த அனுமதிக்க லஞ்சமாக மாதம் ரூ.25 லட்சம் கேட்டு சுரங்க அதிகாரியை உ.பி. பாஜக எம் எல் ஏ மிரட்டி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாந்தா மாவட்டத்தில் ஒரு மணல் வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு அதே மாவட்டத்தை சேர்ந்த சைலேந்திர சிங் என்னும் சுரங்க அதிகாரி பணியில் உள்ளார். இந்த சுரங்கத்தில் மணல் எடுக்கும் பணிக்காக எப்போதாவது வெடி குண்டுகள் உபயோகித்து வந்துள்ளனர். மிகவும் பலம் குறைந்த இந்த வெடிகுண்டின் விலை ரூ.150 ஆகும்

உத்திரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் பிரஜேஷ் குமார் பிரஜாபதி என்பவர் பாஜகவை சேர்ந்தவர் ஆவார். இவர் சுரங் அதிகாரி சைலேந்திர சிங்கை தனது 30 ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர் சைலேந்திர சிங் வெளியில் செல்ல முடியாதபடி அவரை ஒரு அறையில் அடைத்துள்ளார்.

அத்துடன் மணல் சுரங்கத்தில் வெடிகுண்டு உபயோகிப்பது தவறு எனவும் அதை கண்டுக் கொள்ளாமல் இருக்க தமக்கு மாதம் ரூ.25 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து சாதுரியமாக சைலேந்திர சிங் தப்பி உள்ளார். உடனடியாக இது குறித்து காவல்துறையிடம் சிங் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் அடிப்படையில் பிரஜேஷ் குமார் பிரஜாபதி மேல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஆனந்த், “சைலேந்திர சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜாபதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை பிரஜாபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததும் கைது செய்யப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர் பிரஜாபதி, ”இது மிகவும் தவறான குற்றச்சாட்டு. அதிகாரி சிங் தெரிவித்த சம்பவ இடத்தில் ரிக்‌ஷா மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர். அப்படி இருக்க நான் அவரிடம் ரூ.25 லட்சம் தொகையை எவ்வாறு லஞ்சமாக கேட்பேன்? அவர் என் முன்னால் தனது புகாரை நிரூபிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.