லக்னோ:

‘‘ராமரின் மறுஅவதாரமான மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் இணைந்து நாட்டில் ராம ராஜியத்தை கொண்டு வருவார்’’ என்று சர்ச்சைக்குறிய உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

‘‘இதில் அமித்ஷா ராமரின் சகோதரர் லட்சுமணன் மற்றும் சானக்யா என்றும், யோகி ஆதித்யநாத் பிரம்மச்சாரி ஹனுமன்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘‘ராமர், லட்சுமணன், ஹனுமனை கொண்ட இந்த அணி பாரதத்தில் ராமராஜ்யத்தை ஏற்படுத்தும்’’ என்று அவர் குறிப்பிட்டார்.

அதோடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ராவணனின் தங்கையான ‘சுர்பனகா’ என்று அவர் குறிப்பிட்டார். இப்படி சர்ச்சையாக பேசுவது பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்குக்கு வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவம் அதிகரிப்புக்கு பெற்றோர் தான் காரணம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.