பெண் காவல் ஆய்வாளரை மிரட்டிய பாஜக எல் எல் ஏ
ருத்ரபூர்
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபூர் தொகுதி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் ராஜ்குமார் துக்ரால் ஒரு பெண் காவல் அதிகாரியை மிரட்டிய விடியோ வைரலாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபூரில் பணி புரியும் பெண் காவல்துறை ஆய்வாளர் அனிதா கொய்ராலா. இவர் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த சமயம் இரு சக்கர வாகனத்தில் ஒரு தம்பதி சென்றுக் கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை ஓட்டிய ஆண் போக்குவரத்து விதிகளை மீறியதால் கொய்ராலா வாகனத்தை நிறுத்தி உள்ளார்.
அத்துடன் அந்த வாகனத்தை செலுத்தியவரிடம் அவருடைய ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே இருவருக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தம்பதிகளை கொய்ராலா அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் துக்ரால் இவர்களுக்கு ஆதரவாக அங்கு வந்துள்ளார்.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் துக்ரால் பெண் காவல் ஆய்வாளரை மிரட்டும் படி பேசி உள்ளார். அதனால் கோபம் அடைந்த கொய்ராலாவும் பதிலுக்கு சத்தம் பொட்டுள்ளார். அதை ஒட்டி ராஜ்குமார் துக்கல் அந்த பெண் அதிகாரி ஒழுங்காக நடந்துக் கொள்ளவேண்டும் என மிரட்டி உள்ளார். இதுகுறித்து கொய்ராலா அளித்த புகாரின் பேரில் ராஜ்குமார் துக்கல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ராஜ்குமார் துக்கல் பெண் அதிகாரி அனிதா கொய்ராலாவை மிரட்டும் காட்சி வீடியோ பதிவாக்கபட்டு வைரலாகி உள்ளது.