கர்நாடகாவில் ஒரு வாரத்தில் பாஜ ஆட்சி: பாஜக எம்எல்ஏ ‘ஆரூடம்’

ஓசூர்:

ர்நாடகாவில் ஒரு வாரத்திற்குள் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கர்நாடக முன்னாள் மந்திரியும், ஹூக்கேரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான உமேஷ் கத்தி கூறி உள்ளார். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக குமாரசாமியும், துணைமுதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வராவும் இருந்து வருகின்றனர். கூட்டணி மந்திரி சபை ஆட்சி செய்து வருகிறது.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின்போது எந்தவொரு கட்சிக்கும்  பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கவர்னர் துணையோடு ஆட்சியை கைப்பற்ற பாஜ முயற்சி மேற்கொண்டது. முதல்வராக எடியூரப்பாவை கவர்னர் நியமனம் செய்தார்.

ஆனால், உச்சநீதி மன்றம் தலையீடு காரணமாக எடியூரப்பாவால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில், சட்டசபையில் இருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ், ஜனதாதளம் கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது.

இந்த நிலையில், எப்படியும் ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வரும் பாஜக, காங்கிரஸ் ஜனதாதளம் கூட்டணி கட்சியினரிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பண ஆசை காட்டி தங்கள் அணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சமீப காலமாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே சற்று உரசல் போக்கு நிலவி வருகிறது. இதை காரணமாக வைத்துக்கொண்டு கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியக கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ‘‘உங்களுக்கு (உமேஷ் கத்திக்கு) திறமை இருந்தால், 24 மணி நேரத்தில் ஆட்சியை கவிழுங்கள், பார்க்கலாம், இல்லையென்றால், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று சவால் விடுத்தார்.

இந்த நிலையில், கர்நாடக முன்னாள் அமைச்சரும்,   ஹூக்கேரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வுமான உமேஷ் கத்தி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இன்னும் ஒரு வாரத்தில் பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தங்களோடு  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் இணைப்பில் உள்ளனர் என்றும், உடனடியாக  10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதன்காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு கவிழும் என்ற உமேஷ், அதைதையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். இது பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது.

கார்ட்டூன் கேலரி