Random image

20ஆண்டு தலைமறைவு பாஜ எம்எல்ஏ கைது செய்யப்பட்டு 40 நிமிடத்தில் ஜாமினில் விடுதலை! சுப்பிரமணியசாமி நக்கல்

சத்னா:

20ஆண்டு தலைமறைவு குற்றவாளியான பாஜ எம்எல்ஏ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு 40 நிமிடத்தில் ஜாமின் கிடைத்துள்ளது. இதை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி நக்கல் செய்துள்ளார்.

மத்தியபிரதேசத்தில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவை சேர்ந்த சங்கர்லால் திவாரி என்பவர் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர்மீது 1997ம் ஆண்டு சத்னா பகுதியில் காவல்துறை அதிகாரியை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எம்எல்ஏ சங்கர்லால் திவாரி தலைமறைவாக இருந்தது வந்தாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

40நிமிடத்தில் ஜாமினில் வெளியே வந்த பாஜ எம்எல்ஏ சங்கர்லால் திவாரி

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  இதுவரை கைது செய்யப்படாமல் இருந்து வந்த திவாரியை வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர்  கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவருக்கு நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கினார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் சுமார் 40 நிமிடங்களுக்குள் நடைபெற்று முடிந்தது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி, இந்த சம்பவம் குறித்து நக்கல் செய்து டிவிட் செய்துள்ளார். இது பாஜகவினரிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.