க்னோ

. பி. அரசு ஏழை மாணவர்களுக்கு அளித்த உதவித்தொகையை தராமல் மோசடி செய்ததாக பா ஜ க வை சேர்ந்த எம் எல் ஏ ஒருவர் மீது குற்றப் பத்திரிகை பதியப்பட்டுள்ளது.

சர்தார் படேல் கிராஜுவேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெண்டல் அண்ட் மெடிகல் சயின்ஸ் என்னும் கல்வி நிறுவனத்தை பா ஜ க வின் சட்டமன்ற உறுப்பினர் அனுராக் சிங் நடத்தி வருகிறார்.

உத்திரப் பிரதேச அரசின் சமூகநலத் துறை ஏழை மாணவர்களுக்கு அவர்கள் கட்டிய கல்வித்தொகையை திருப்பி அளிக்கிறது.  அதன் படி சர்தார் படேன் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற ஒன்பது மாணவர்களுக்கு உதவித்தொகை அரசால் வழங்கப் பட்டுள்ளது.  ஆனால் நிர்வாகம் இந்தப் பணத்தை அந்த மாணவர்களுக்குத் தரவில்லை.  மொத்தத் தொகை சுமார் ரூ. 75 லட்சங்கள் ஆகும்.

மாணவர்கள் இது குறித்து புலனாய்வுத்துறையிடம் புகார் அளித்தனர்.  விசாரனை மேற்கொண்ட புலனாய்வுத்துறை இது விஷயத்தில் முறைகேடுகள் நடந்ததை கண்டு பிடித்தது.  கட்டணத் தொகையை திருப்பித்தராமல் மோசடி செய்ததாக கல்வி நிறுவனத்தின் தலைவரும் பா ஜ க சட்டமன்ற உறுப்பினருமான அனுராக் சிங்,  அந்த கல்வி நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் மேனேஜர் பங்கஜ் குமார் வியாஸ், மற்றும் அக்கவுண்டண்ட் சுதிர் ஷர்மா ஆகிய மூவரின் மீதும் குற்றாப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேறு மாணவர்களின் உதவித் தொகையிலும் இது போல மோசடி நடந்திருக்கக் கூடும் என அஞ்சும் புலனாய்வுத் துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.