க்னோ

த்தரப்பிரதேச மாநில பாஜக அரசை எதிர்த்து அதே கட்சியைச் சேர்ந்த 100 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உ பி மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.   காசியாபாத் நகரில் உள்ள லோனி தொகுதியின் பாஜக உறுப்பினர் நந்த் கிஷோர் குஜ்ஜார் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.  அவருடைய மைனர் மகன் வாகனத்தை வேகமாக ஓட்டி ஒரு விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.   நந்த் கிஷோர் தேர்தல் அதிகாரிகளுடன் தகராற்றில் ஈடுபட்டதாகப்  புகார் எழுந்தது.

அதன் பிறகு அவருடைய தொகுதி பிரதிநிதி போக்குவரத்து விதிகளை மீறியதுடன் அதைத் தடுத்த காவலர்களுடன் சண்டை இட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.   அத்துடன் நந்த் கிஷோர் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரியை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகாரில் அவருக்கு மாநில பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

இந்த கன்னத்தில் அறைந்த வழக்கு குறித்து ஒரு தன்னிலை விளக்கம் அளிக்க இன்று சட்டப்பேரவை ஜீரோ அவரில் நந்த் கிஷோர் பேச முற்பட்டார்.   இதற்கு அவை விவகார அமைச்சர் சுரேஷ் கன்ன அனுமதிக்க மறுத்து அவரை அமருமாறு சொன்னார்.  இதற்காக சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து அவரை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆயினும் சபாநாயகர் நந்த் கிஷோரைப் பேச அனுமதிக்கவில்லை.  இதை ஒட்டி சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அவை நடுவில் சென்று அரசை எதிர்த்து கோஷம் இட்டனர்.  இதனால் அவையில் கூச்சல் அதிகரித்தது.   பாஜக அமைச்சர்கள் தங்கள் உறுப்பினரை சமாதானம் செய்ய முயன்றனர்.  தனிப்பட்ட முறையில் தன்னிடம் இது குறித்து பேசுமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் இதை ஒப்புக் கொள்ளாத நந்த் கிஷோர் அவையில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கி உள்ளார்.   தன்னை பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அவை நடுவில் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.அவருக்கு ஆதரவாக 100 பாஜக உறுப்பினர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக அரசுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த 100 உறுப்பினர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.