தலித் காதலரை மணந்த மகளை மிரட்டும் பாஜக எம் எல் ஏ : அதிர்ச்சி வீடியோ

ரேலி, உத்திரப் பிரதேசம்

னது மகள் தலித் காதலரை மணந்ததால் ஆத்திரம் அடைந்த பாஜக எம் எல் ஏ ராஜேஷ் மிஸ்ரா கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் மகள் தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பிதாரி செயின்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா.  இவர் பாஜகவை சேர்ந்தவர்.   இவர் மகள் சாக்‌ஷி மிஸ்ரா என்பவர் அஜிதேஷ்குமார் என்னும் தலித் இளைஞரை காதலித்துள்ளார்.  இதற்கு ராஜேஷ் மிஸ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எனவே 23 வயதாகும் சாக்‌ஷியும் 29 வயதாகும் அஜிதேஷ் குமாரும் கடந்த வியாழன் அன்று பதிவுத் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.   அதை ஒட்டி ராஜேஷ் மிஸ்ரா இவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் சாக்‌ஷி மிஸ்ரா தனது திருமணம் குறித்தும் தந்தையின் மிரட்டல் குறித்தும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள்ளார்

இந்த வீடியோவில் அவர் தனக்கு தனது தந்தை, சகோதரர் மற்றும் உறவினரால் ஆபத்து உள்ளதாகவும் பரேலி மாவட்ட காவல்துறை அதிகாரி தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.  அத்துடன் தனது தந்தையிடம் தனது வாழ்வை தன் விருப்பபடி வாழ விடுமாறும் தனக்கோ அல்லது கணவருக்கோ ஏதும் நேர்ந்தால் அவரை கம்பி எண்ண வைத்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வைரலாகிறது.  இந்த வீடியோ குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா கருத்து சொல்ல மறுத்துள்ளார்.

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோவின் தொகுப்பு

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP MLA daughter, Death threat, Married to dalit, video released
-=-