தனது பதவியை காப்பாற்ற கொரொனா நாடகமாடிய பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்!

பனாஜி: நீதிமன்றத்தின் பதவி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் வகையில், பாரதீய ஜனதாவுக்கு கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாக போலியாக நாடகமாடிய சம்பவம் வெளிப்பட்டுள்ளது.

தற்போது இவர் பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர், போலியான கொரோனா காரணத்தைக் கூறி மருத்துவமனையில் போய் சேர்ந்துகொண்டார்.

கோவா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதீய ஜனதாவுக்கு தாவினர். இவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜிபிசிசி தலைவர் கிரிஷ் சோடன்கர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11ம் தேதியான நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த விசாரணைக்கு 4 வார காலம் தடைவிதிக்கும் நோக்கத்தோடு, நுவெம் சட்டமன்ற உறுப்பினர் வில்ஃபிரெட் டி’சா இந்த நாடகத்தை ஆடியுள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்துவித வெட்கங்கெட்ட மற்றும் மட்டரகமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை பாரதீய ஜனதா ஈடுபட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.