மேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்கு தடை: உச்சநீதி மன்றத்தில் பாஜ மேல்முறையீடு மனு தாக்கல்

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அரசு மேற்கொள்ள இருந்த ரத யாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்க மாநில பாரதியஜனதா கட்சி சார்பில் இந்த மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தேர்தல் பிரசாரமாக ரத யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்ளும் ரத யாத்திரை 28ந்தேதி முதல் 31ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து. மாநிலத்தில் பாஜக கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில், மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதி களையும் வலம் வரும் வகையில் சுமார் 45 நாட்கள்,  3 இடங்களில் ரத யாத்திரை நடத்த பாஜக முடிவு செய்திருந்தது.

ஆனால், இந்த ரத யாத்திரை காரணமாக வகுப்பு கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி, மம்தா பானர்ஜி அரசு ரத யாத்திரைக்கு தடை விதித்தது. மேற்கு வங்க மாநிலஅரசின் தடையை எதிர்த்து பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் முதலில் பாஜகவின் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கிய உயர்நீதி மன்றம், மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கின் விசாரணையின்போது, மாநில அரசு  36 ரகசிய ஆவனங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ரத யாத்திரைக்கு தடைவிதிப்பதாக கொல்கத்தா உயர்நீதி மன்றம் அறிவித்தது.

இந்த நிலையில், கொல்கத்தா உயர்நீதி மன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் பாஜக சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்தபிறகு  நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: bjp appeal petition, BJP's Rath Yatra, Kolkata High Court, supreme court, west bengal, உச்சநீதி மன்றம், கொல்கத்தா உயர்நீதி மன்றம், பாஜ ரத யாத்திரை, பாஜக மேல்முறையீடு, மனு, மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளம், மேல்முறையீடு...?
-=-