பள்ளிக்கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்த எம் பி க்கு பாராட்டுமழை

ரேவா, மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேச மாநில பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா வெறும் கைகளால் பள்ளிக்கழிவறையை சுத்தம் செய்ததை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்று ரேவா தொகுதி ஆகும்.   இங்கு பாஜக வை சேர்ந்த ஜனார்தன் மிஸ்ரா பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   இவர் தொகுதி மக்களுக்காக நேரடியாக களத்தில் இறங்குவதில் புகழ் பெற்றவர்.   ரேவா தொகுதியில் முன்பு ஒரு முறை சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் இவர் ஈடுபட்டது பலரின் கவனத்தை கவர்ந்தது.

தற்போது தனது தொகுதியிலுள்ள காஜுஜா கிராமத்தில் தூய்மைப் பணி நடப்பதை ஜனார்தன் மிஸ்ரா ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்.    அந்த சமயத்தில் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்ரார்.   அந்த கழிவறை கோப்பை சேறும் சகதியுமாக அடைந்து கிடந்தது.   அதனால் அவர் தனது வெறும் கைகளால் அந்த சேற்றை அள்ளி சுத்தம் செய்தார்.

இந்தக் காட்சி வீடியோ படமாக்கப்பட்டு சமூக வலைத் தளங்களில் பதியப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.   ஜனார்தன் மிஸ்ராவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு மழையை பொழுந்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி