ராகுலுக்கு பா.ஜ.க. எம்.பி. பாராட்டு

 

பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கீா்த்தி ஆஸாத் எம்.பி., காங்கிரஸ் தலைவர் ராகுலை பாராட்டியுள்ளார்.

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான கீா்த்தி ஆஸாத், பீகார் மாநிலம் தா்பங்கா மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினராக இருக்கிறார். டில்லி மாவட்ட கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடா்பாக மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி மீது அவா் குற்றறச்சாட்டுகள் முன்வைத்ததை அடுத்து பாஜகவில் இருந்து அவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவா் தெரிவித்ததாவது:

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் ஆகிவிட்டன. தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி முன்வைத்த வாக்குறுதிகளில் பல ஏன் நிறைவேற்றப்படவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கேள்வி கேட்பது மக்களின் உரிமை. அவா்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது, மக்கள் பிரதிநிதிகளான எங்களின் கடமை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதாரண மக்களின் பிரச்னைகள் குறித்து பேசி வருகிறார். அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி, இழந்த தனது இடத்தை மீண்டும் பெறும் வகையில் முன்னேறி வருகிறது. இது, ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஓா் எச்சரிக்கை மணியாகும். நான் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், கட்சித் தலைமையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இதுவரை எனக்கு அளிக்கப்படவில்லை

தா்பங்கா தொகுதி மக்கள், 2019 மக்களவைத் தோ்தலிலும் நான் போட்டியிட விரும்புகின்றனா். ஆகவே, அந்தத் தோ்தலில் தா்பங்கா தொகுதியிலேயே ஒரு தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடுவேன்” என்று கீா்த்தி ஆஸாத் கூறினார்

எந்தக் கட்சியில் போட்டியிட உள்ளீா்கள் என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு,   நாட்டில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளே உள்ளன  என்று அவா் பதிலளித்தார். பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கீா்த்தி ஆஸாத், காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதை இப்படி மறைமுகமாக தெரிவித்துள்ளார்