டெல்லி:

புதிய வேலை வாய்ப்புக்களை மோடி அரசு உருவாக்கவில்லை என்று பாஜ கட்சி எம்.பி.யே குற்றம்சாட்டி பேசியதால் லோக்சபாவில் திடீர் ஆரவாரம் ஏற்பட்டது.

உ.பி.மாநிலம் கோஷி நாடாளுமன்ற தொகுதி பாஜ எம்பி ஹரிநாராயண் ராஜ்பார் லோக்சபாவில் பேசுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளில் போதுமான அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியிருப்பதாக மத்திய அரசு கூறுவதில் உண்மையில்லை’’ என்றார்.

ஆளுங்கட்சி உறுப்பினரின் பேச்சை கேட்டு பாஜ அமைச்சர்கள், எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே சமயம் இவரது பேச்சை காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் கைதட்டியும், மேஜையை தட்டியும் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், அவர் பேசுகையில்,‘‘ புதிதாக எந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவி¬ல். இது நடக்கவும் இல்லை. அப்படி செய்திருந்தால் அது தொடர்பான புள்ளி விபரங்களை இங்கே தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த குற்றச்சாட்டுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்ரேயா பதில் கூறவில்லை. அதோடு சபாநாயகரும் அடுத்த கேள்வியை நோக்கி நகர்ந்தார்.