காலியாகும் ராஜஸ்தான் பாஜ கூடாரம்: பாஜக எம்.பி. காங்கிரசில் இணைந்தார்

ஜெய்ப்பூர்:

பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜக எம்.பியும், முனனாள் காவல்துறை அதிகாரி யுமான ஹரிஸ் சந்திர மீனா. பாஜகவில் இருந்து காங்கிரசில் இணைந்தார். இதன் காரணமாக பாஜக கூடாரம் களையிழந்து வருகிறது.

இன்று டில்லி வந்த ஹரிஸ் சந்திர மீனா, காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்டை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார்.

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற ஆயுட்காலம் அடுத்த மாதம் முடிவடைவதையொட்டி, டிசம்பர் 7ந்தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் களைக்கட்டி உள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராஜே சிந்தியா தலைமை மீது அதிருப்தி கொண்ட பல பாஜகவினர் அந்த கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியை நாடி வருகின்றனர். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் தேர்விலும் அதிருப்தி கொண்டு பலர் பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர்.

இந்த பரபரப்பான தேர்தல் காலக்கட்டத்தில்,  ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக போராடி வருகிறது. அதே வேளையில், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகிறது.

இந்த பரபரப்பான  நிலையில், இன்று பாஜக எம்.பி.  ஹரிஸ் சந்திர மீனா, பாஜக-வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

டில்லியில், அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் அசோக் கெலோட் மற்றும் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் முன்னிலையில் இன்று ஹரிஸ் சந்திர மீனா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில பாஜக தலைவர் சச்சின் பைலட் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்றும், 145 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்று  பல்வேறு கருத்துக்கணிப்புகள் உறுதி செய்துள்ள நிலையில், மாநில பாஜக அதிர்ச்சி அடைந்து உள்ளது.

ஏற்ககனவே சமீபத்தில் நாகூர் தொகுதி பாஜக சட்டமனற் உறுப்பினர்  ஹபிபுர் ரஹ்மான் அஷ்ரஃபி லம்பா, பாஜக-வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாஜக வேட்பாளர் பட்டியல் அதிருப்தி காரணமாக, சிலர் பாஜக-வில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்திருப்பதாகவும்,  மாநில அமைச்சர் சுரேந்தர் கோயல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளார்.

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருவது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.