டில்லி

யதானவர்களின் ரேகை பதிவு ஆதார் அட்டையில் சரியாக தெரியாததால் பல குழப்பங்கள் ஏற்படுவதாக பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கூறி உள்ளார்.

பீகார் மாநிலம் ஔரங்காபாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் சிங். இவர் பாஜக வை சேர்ந்தவர்.  இன்று இவர் பாராளுமன்றத்தின் ஜீரோ அவரில் ஒரு பிரச்னையை எழுப்பினார்.

அப்போது அவர், “தற்போது அனைத்து உதவித் தொகை மற்றும் மானியங்களுக்கு ஆதார் இணைக்கப்பட வேண்டும் என இந்த அரசு அறிவித்துள்ளது.   இதனால் பல வயதானவர்கள் துன்புறுகிறார்கள்.   உதாரணத்துக்கு வயதானவர்கள் பலருக்கு ஆதார் கார்டில் ரேகை பதிவு சரியாக இல்லை.   அதனால் பல முதியோருக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை.

அது மட்டுமின்றி பல மானியத் தொகைகளும் இந்த ஆதார் இணைப்பினால் முதியோர்களுக்கு கிடைப்பதில்லை.

அவ்வளவு ஏன் எனது வயதான தாயாருக்கு  கை ரேகைப் பதிவு ஆதாரில் சரியாக இல்லை.  அதனால் அவருக்கு மொபைல் சிம் கிடைக்கவில்லை.  தற்போது அவர் எங்கள் உறவினர் ஒருவரின் பெயரில் சிம் கார்ட் பெற்று அதை உபயோகித்து வருகிறார்.

அதே போல விழிகள் மூலம் பல நேரங்களில் அடையாளம் காண முடிவதில்லை.

அதனால் இந்த ஆதார் இணைப்பு குறித்து அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்”  என கூறி உள்ளார்.