டில்லி

பாராளுமன்ற தேர்தல் வரும் 2019ஆம் வருடம் ஆகஸ்ட் – செப்டம்பரில் நடைபெறும் என ஒரு பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ்.   இவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாஜக சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இவர் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளார்.

அந்த சந்திப்பில் கிருஷ்ண சாகர் ராவ், “அனேகமாக பாராளுமன்ற தேர்தல்கள் முன் கூட்டியே நடைபெற வாய்ப்புள்ளது.  வரும் 2018ஆம் வருடம் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் தேர்தல்கள் நடக்கலாம்.   இது நான் எனது கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பாக சொல்லவில்லை.   ஒரு அரசியல் நோக்கராக எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்.   அனேகமாக இந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரிலோ அல்லது அடுத்த தொடரிலோ இந்த மசோதா நிறைவேற்றப்படலாம்.

தற்போது பிரதமர் மோடி குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பேசி உள்ளது தெரிந்ததே.    வரும் 2019ஆம் வருடம் பல சட்டமன்றங்கள் கான காலக் கெடு முடிந்து தேர்தல் நடைபெற உள்ளது.   அதனால் அந்த சட்டமன்றங்களின் தேர்தலுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெறலாம் என எனக்கு தோன்றுகிறது” எனக் கூறி உள்ளார்.