க்னோ

த்திரப் பிரதேச பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஏமாற்றி இரவு விடுதியை திறக்க வைத்துள்ளதாக மற்றொரு பாஜக பிரமுகர் மீது குற்றம் சாட்டி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சாக்‌ஷி மகராஜ்.   இவர் ஒரு சன்யாசி.    இவர் நேற்று ஒரு இரவு விடுதியை திறந்து வைத்தார்.   ஒரு சன்யாசி இரவு விடுதியை திறந்து வைத்தது மாநிலத்தில் சர்ச்சையை உண்டாக்கியது.   அந்த சர்ச்சையை மேலும் அதிகம் ஆக்குவது போல அவர் ஒரு புகார் கடிதத்தை மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு அனுப்பி உள்ளார்.

சாக்‌ஷி மகராஜ் அந்த கடிதத்தில், “உத்திரப் பிரதேச மாநில முன்னாள் பாஜக தலைவர் ரஜ்ஜன் சிங் எனக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.  அவர் மருமகன் ஒரு உணவு விடுதி அமைத்துள்ளதாகவும் அதை திறந்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.   நானும் அதை ஒப்புக் கொண்டு திறந்து வைத்தேன்.

பிறகு தான் அது பாருடன் கூடிய ஒரு இரவு விடுதி என அறிந்தேன்.   அதை நிரூபிக்க நான் அந்த விடுதியின் உரிமத்தையும் வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.   நான் பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல, ஒரு சன்யாசியும் கூட.   இது போன்றவைகளிலிருந்து நான் விலகி இருக்கிறேன்.   என்னை இவ்வாறு ஏமாற்றிய ரஜ்ஜன் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

சென்ற வருடம்  உத்திரப் பிரதேச பாஜக அமைச்சர் ஸ்வாதி சிங் ஒரு பீர் பாரை திறந்து வைத்தது குறிப்பிடத் தக்கது