க்னோ

டஒதுக்கீட்டை ஒழிக்க நடக்கும் சதியை அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக உத்திரப் பிரதேச  பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சாவித்ரி பாய் புலே கூறி உள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற இடத்தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரின் தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது.    அதன் பிறகு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கட்சியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.  கூட்டணிக் கட்சிகளும் யோகிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினரான சாவித்ரி பாய் புலே, “இட ஒதுக்கீட்டை அழிக்க பெரும் சதி நடக்கிறது.   அதை ஆளும் பாஜக அரசு கண்டுக் கொள்ளவில்லை.  இந்த விஷயத்தில் அரசு ஒரு மௌனமான பார்வையாளராக இருந்து வருகிறது.   நான் இந்த விஷயத்தில் அமைதி காக்க மாட்டேன்.  இட ஒதுக்கீட்டை ஒழிப்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டால் சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும்.   அதை இந்த அரசு லட்சியம் செய்யாவிடினும் நான் கவலைப்பட போவதில்லை.   நான் விடாமல் அவர்களுக்காக போராடுவேன்.   இதற்காக வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி அன்று ஒரு மாபெரும் பேரணையை நடத்த உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.