ஷரியத் நீதிமன்றம் கேட்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்…பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ்

லக்னோ:

சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசுவது என்பது பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சாக்‌ஷி மகாராஜ் எம்.பி.க்கு வழக்கமான விஷயமாகிவிட்டது.

இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஷரியத் நீதிமன்றங்கள் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு.

மிகவும் பலமானதாக இருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வாழ தகுதியற்றவர்கள். அவர்களை மகிழ்ச்சியுடன் பாகிஸ்தானுக்கு வழியனுப்பி வைக்கிறோம்’’ என்றார்.