மும்பை

பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ள நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் காகடே வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டந்த அக்டோபர் 21ம் தேதி நடைபெற்ற 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்குத் தேர்தலில் பாஜவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இக் கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றது. இருந்தாலும் முதல்வர் பதவி பங்கீடு காரணமாக மோதல் ஏற்பட்டு ஆட்சி அமைக்க முடியாமல் போனது

எனவே தேர்தலில் 54 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா தீவிர முயற்சி மேற்கொண்டது.

மூன்று கட்சிகளும் சேர்ந்து இதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. நேற்று முன் தினம் இரவு புதிய அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தால் சிவசேனா கடியின் தலைவர் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முதல்வர் ஆவார் எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருந்தார்.  நேற்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்திருந்தனர்.

ஆனால் நேற்று காலை மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பமாக. அதிகாலை 5.47 மணிக்கு அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டு, தேவேந்திர பட்நவிஸ் மீண்டும் முதல்வர் ஆனார்.   அத்துடன் தேசிய வாத காங்கிரசின் தலைவர் பவாரின் உறவினர் அஜித் பவார் துணை முதல்வரானார். இருவருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளன. இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இன்று திடீரென, மும்பையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக நாடாளுமன்ற. சஞ்சய் காகடே வந்துள்ளார்.    இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பாஜக வின். சஞ்சய் காகடே சரத்பவார் உடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.  .