‘இந்து பாகிஸ்தான் பேச்சு எதிரொலி:’ சசிதரூர் மென்டலாகி விட்டார்: சுப்பிரமணியசாமி பாய்ச்சல்

டில்லி:

சுனந்தாபுஷ்கர் வழக்கு காரணமாக சசிதரூர் மனநிலையை இழந்துவிட்டார். அவரை மோடி மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று கூறியிருந்தார்.

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி  சசிதரூரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய சுப்பிரமணியசாமி,  சசிதரூர் எதையோ  அளவுக்கு அதிகமாக உட்கொண்டு விட்டார்போல…. அவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் ஏமாற்றத்தின் வெளிப்பாடு என்று கூறினார்.

அவர் கூறிய,  இந்து பாகிஸ்தான் என்றால் என்ன? அதற்கு என்ன அர்த்தம்? அவர் பாகிஸ்தா னுக்கு எதிரானவரா? அல்லது  அவர் பாகிஸ்தானை  சமாதானப்படுத்த முயல்கிறாரா என்று கேள்வி எழுப்பிய சாமி இந்திய பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தானிடம் உதவி கோருகிறார் சசிதருர் என்றார்.

சசிதருக்கு பாகிஸ்தானிய பெண் தோழிகள் உள்ளனர் என்பது தெரியும் என்ற சாமி, அவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ் அமைப்பின் உளவாளிகள் என்றும் குற்றம் சாட்டினார்.

சசிதருரின் இந்த பேச்சு குறித்த விவகாரத்தில்  தனக்கு தொடர்பில்லை என்பதை காங்கிஸ் தலைமை  தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வற்புறுத்திய சுப்பிரமணியன்சாமி, சசி தரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும் என்றும், அவருக்கு எதுவும் மருத்துவ உதவி தேவையா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் சமீபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பேசி காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான சசித ரூர், வரும் 2019- மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்,  நமது நாட்டின் ஜனநாயம் சிதைந்து போய் விடும். புதிய அரசியலைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானைப் போலவே, சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படாத ஒரு பாகிஸ்தான்  உருவாவதற்கு வழி வகுக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு இந்திய நாடு  இந்து பாகிஸ்தான் நாடாக மாறிவிடும் என்று பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சுப்பிரமணியசாமி, சுனந்த புஷ்கர் வழக்கு காரணமாக சசிதரூர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும்,  அவரை மனநல மருத்துவமனைக்குதான் அனுப்ப வேண்டும் என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

You may have missed