பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர்….

புதுடெல்லி:
பாரதிய  ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்சிடம் ஆலோசனை கேட்கிறார் என்பதையும், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சீனாவை ஆதிக்க எல்லைக்கோட்டை தாண்டி வராமல் புனிதத்தன்மையை கடைபிடிக்க கூறியதையும் நகைப்பிற்க்குரியது என்று விமர்சித்துள்ளார்.

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்தினர் 20 இந்திய இராணுவ வீரர்களை கொன்று குவித்ததையொட்டி சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு இந்திய வெளியுறவு துறையை விமர்சித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி சமூக வலைதளத்தில் தன்னை பின்தொடரும் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி கூறியதை போல் எவ்வாறு தங்களுடைய இணைப்பை பயன்படுத்தி இந்தியா மற்றும் சீனாவின் தற்போதய போரை சரி செய்ய போகின்றீர்கள் என்று நகச்சுவையாக கேட்டபோது….. தன்னுடைய பொறுமையை இழந்த சுப்பிரமணியன் சுவாமி சமூக வலைதளத்தில் தன்னை பிந்தொடர்வதை நிறுத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

மேலும் சுப்பிரமணியன் சுவாமி, இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி தான் 1970-ஆம் ஆண்டு தயாரித்த “ஸ்வதேசி திட்டத்தை” பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 1970-ஆம் ஆண்டு நாநாஜி தேஷ்முக் மற்றும் ஜகன்னாத் ஜோஷி கேட்டிக்கொண்டதற்கு இணங்க இந்தியாவில் 10% மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு தான் தயாரித்த ஸ்வதேசி திட்டம் நன்றாக வேலை செய்யும், தற்போது நீடி ஆயோக்கை புதிய திட்டம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் எனது திட்டத்தை தாராளமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் சுப்பிரமணியன் சுவாமியை பின்தொடரும் ஒருவர் ‘தாங்கள் இதைப்பற்றி பிரதமர் நரேந்திர மோடியிடமே நேரடியாக கலந்தாலோசிக்கலாமே என்று கேட்டதற்க்கு’ சுப்பிரமணியன் சுவாமி, அவர் பில்கேட்சிடம் அறிவுரை கேட்கின்றார் மற்றவர்களிடம் சென்று கேட்கின்றார். என்னிடம் நியயமாக கேட்டால் நான் நிச்சயம் உதவி செய்வேன், நான் இன்றும் மூத்த பி.ஜே.பி. தலைவர்களுடன் பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் ஆனால் எனக்கு மற்றவர்களிடம் சென்று பேச விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி