’சட்டம் என் கையில்’’ -பா.ஜ.க. எம்.பி.யின் அடாவடி..

சாதாரண குடிமகன் ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்கு நகர்ந்தாலேயே, போலீசார் லத்தியுடன் பாய்ந்து, அந்த  நபரை நையப்புடைக்கிறார்கள்.

இந்த சட்டமெல்லாம் பா.ஜ.க. எம்.பி.க்கு பொருந்தாதோ?

ஜார்கண்ட் மாநிலம் தானாபாத்தை சேர்ந்த பா.ஜ.க. கட்சியின் எம்.பி. ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் இருந்து தானாபாத்துக்கு காரில் வந்துள்ளார்.

வரும் வழி எங்கும் ஏகப்பட்ட சோதனை சாவடிகள் இருந்தும், அவர் மாட்டியதாக தெரியவில்லை.

எம்.பி. டெல்லியில் இருந்து சொந்த ஊர் வந்திருப்பது நேற்று தான் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர்  உள்ளிட்ட உயர்  அதிகாரிகள், எம்.பி.வீட்டுக்கு படை எடுத்துச் சென்றுள்ளனர்.

‘’ஊரெல்லாம் கொரோனா பாதிப்பு உள்ளது. உங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள்’’ என்று பணிவுடன் சொல்லி விட்டுத் திரும்பியுள்ளனர்.

டெல்லியில் இருந்து காரை ஓட்டி வந்த எம்.பி.யின் டிரைவரையும், தனிமையில் இருக்க வலியுறுத்தியுள்ளனர்.

’’ கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒரு எம்.பி.யே விதியை மீறி ஊரு விட்டு ஊரு வரலாமா?’’ என்று கேட்க-

ஊடகங்கள் எம்.பி.யின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால், அவர் அந்த அழைப்பை ஏற்கவே இல்லை.

– ஏழுமலை வெங்கடேசன்