டில்லி:

17வது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மகக்ளவையின் இடைக்கால சபாநாயகராக மூத்த பாஜக  பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட் டிருந்தார். அவருக்கு இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவர் மாளிகையில் அவரது பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

17வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை  பிடித்துள்ள நிலையில், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் வகையில் இடைக்கால சபாநாயகராக பாஜக மூத்த உறுப்பினர் டாக்டர் வீரேந்திரன குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று  17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்  தொடங்குவதால், முன்னதாக இடைக்ககால சபாநாயகருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, இடைக்கால சபாநாயகர்வீரேந்திர குமார்  முதல் 2 நாளில் புதிய எம்.பி.க் களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதையடுத்து, வரும்  19–ந் தேதி புதிய சபாநாயகர் தேர்வு  நடைபெற உள்ளது.