டில்லி:

மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க நாளை மாலை டில்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக 303 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் வகையில், இன்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், 16வது மக்களவையை முடிவுக்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் வழங்கினார்.

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுவதாக பாஜக தலைமை அறிவித்து உள்ளது.

டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளனர். மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் நாளை கூட்டம் நடைபெறுகிறது.

இதையடுத்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருவார் என்று தெரிகிறது. வரும்  வரும் 30-ம் தேதி 2-வது முறை யாக நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்பார் என்றும் டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.